Tap to Read ➤

அணு ஆயுத தாக்குதல் - அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை!

முதன் முறையாக தனது மகளை அறிமுகம் செய்த வடகொரிய அதிபர்
HTML Tamil
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டவர்.
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, அவ்வவ்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வடகொரியா அச்சுறுத்தி வருகிறது
ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா இந்த ஆண்டில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தியுள்ளது.
அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா மீண்டும் சோதனை செய்துள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணையாது, சுமார் 15,000 கி.மீ. தூரம் பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்டதாகும்.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், முதல் முறையாக தனது மகளின் புகைப்படம் ஊடகத்தில் வெளியிட அனுமதித்துள்ளார்.
ஏவுகணை சோதனையின்போது, அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளையும் அழைத்து வந்து ஏவுகணையை பார்வையிட்டார்.
ராணுவ உயர் அதிகாரிகளுடன் கிம் ஜோங் உன் உரையாடும்போதும், அதிபரின் 9 வயது மகள் உடன் இருந்துள்ளார்.
ஏவுகணை ஏவும் வளாகத்தில், பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை முடியும் வரை தனது பெற்றோருடன் அந்த சிறுமி காணப்படுகிறார்.
வடகொரியாவை அச்சுறுத்தும் நாடுகளுக்கு, அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என அதிபர் கிம் ஜோங் உன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அணு ஆயுத மிரட்டல்களை, அணு ஆயுதங்களை கொண்டே முறியடிப்போம் என கிம் ஜோங் உன் சூளுரைத்துள்ளார்.