Tap to Read ➤

ஏலியன்களுக்கு நிர்வாண படங்களை அனுப்பிய நாசா! ஏன்

Nasa's new plan to contact aliens by sending dressless pics.
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஏலியன்களை தொடர்பு கொள்ள ஆய்வாளர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
அமெரிக்காவின் நாசா ஆய்வாளர்கள் விண்வெளியில் உள்ள ஏலியன்களை தொடர்பு கொள்ள 'Becon in the Galaxy' என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வேற்றுக்கிரக வாசிகளை தொடர்பு கொள்ளும் வகையில் நாசா ஆய்வாளர்கள் பைனரி செய்திகளைக் கொண்ட மெசேஜ்களை விண்வெளிக்கு அனுப்புகின்றனர்.
அடிப்படை கணிதம், இயற்பியல் கருத்துக்கள், பூமியில் உள்ள உயிர் வேதியியல் கலவை, பிரபஞ்சத்தில் நமது சூரியக் குடும்பத்தின் நிலை குறித்த மெசேஜ்களும் அனுப்பப்பட்டு உள்ளது.
குறிப்பாகப் பிரபஞ்சத்தில் மிகவும் பொதுவான தனிமமாக அறியப்படும் ஹைட்ரஜன் குறித்த இமேஜ் வடிவத்தையும் நாசா ஆய்வாளர்கள் விண்வெளிக்கு அனுப்பி உள்ளனர்.
எந்தவொரு கிரகத்திலும் உயிர்கள் இருக்கத் தேவையான ஆற்றலை உருவாக்குவது ஹைட்ரஜன் அவசியம் என்பதால் இந்த மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
மனிதர்கள் கைகளை அசைத்து, வரவேற்பது போன்ற ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாண டிஜிட்டல் படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால், இதன் மூலம் ஏலியன்களால் யார் தங்களைத் தொடர்பு கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும் என்பதே நாசாவின் கணிப்பு.
ஏலியன்கள் பதில் அளிக்க விரும்பினால், அவர்களுக்கு உதவும் வகையில் நமது சூரியக் குடும்பத்தின் முகவரியையும் ஆய்வாளர்கள் அனுப்பியுள்ளனர்.