Tap to Read ➤
ஜாதிக்காயின் (Nutmeg) மருத்துவ பயன்கள் என்ன?
ஜாதிக்காயின் பொதுப் பலன்கள்
Sidhanathan K
உலகில் வேறெங்குமே காண முடியாத பல மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் நம் நாட்டில் உள்ளன.
அப்படிப்பட்ட ஒரு அற்புதமான மூலிகை தான் ஜாதிக்காய்.
ஜாதிக்காய் அதிக காரமும் துவர்ப்பு தன்மையும் கொண்டது.
இந்தியாவில், ஜாதிக்காய் முக்கியமாக கேரளாவின் திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது.
கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் பல உயிர்வேதியியல் கலவைகள் ஜாதிக்காயில் உள்ளன.
பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து கொடுக்கலாம்.
ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி தடவினால் வயிற்று போக்கு நின்றுவிடும்.
ஆயுர்வேத உளவியலில் மனஅழுத்தத்தைப் போக்க ஜாதிக்காய் பரிந்துரை செய்யப்படுகிறது.
ஜாதிக்காய் ஆண்களில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.
மேலும், முக சுருக்கங்ள் ஏற்படுவதை தடுக்கிறது.