Sidhanathan K       Sep 30, 2024

உடம்ப கொறச்சு ஒல்லி ஆகணுமா..? சீனி அவரக்காய் போதுமே..!!

சீனி அவரக்காயை கொத்தவரங்காய் என்றும் சொல்வதுண்டு. இந்த காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும், புரதம், நார்ச்சத்து,வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலியேட், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அதேபோல, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

நாம் அதிக நார்ச்சத்து உணவை எடுத்துக்கொண்டால்தான் உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க முடியும். அதற்கு இந்த கொத்தவரங்காய் பேருதவி புரிகிறது.

கொத்தவரங்காயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து இதய நோயின் அபாயத்தை குறைக்கும். அதேபோல, இதில் உள்ள உட்பொருள் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறதாம்.

அதுமட்டுமல்லாமல் கெட்ட கொலஸ்டிராலை குறைத்து, நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும், இரத்த சோகையை நீக்குகிறது.

சீனி அவரக்காய் ஏராளமான பிறப்பு பிரச்சனைகள் மற்றும் கர்ப்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதால் கர்ப்பிணிகள் தாராளமாக சாப்பிடலாம்.

மேலும், கருவில் உள்ள குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் கால்சியம் குறைபாடுகளை சரிசெய்துவிடும்.

இதில் வைட்டமின் A உள்ளதால் கண்பார்வைக்கும் நல்லது. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றிகள் வயிற்றில் புண்களை ஏற்படுத்தாமல் பாதுகாக்கிறது. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இதனை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுபவர்கள் இந்த கொத்தவரங்காயை சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அதேபோல, வாதம், பித்தம் உள்ளவர்களும் இந்த காயை அடிக்கடி சாப்பிடக்கூடாதாம்.