Tap to Read ➤

பண்டிகை என்றாலே வசூல் வேட்டையில் இறங்கும் ஆம்னி பஸ்கள்..!!

புகார் அளிக்க கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்கள்!
Sidhanathan K
தீபாவளிக்கு பண்டிகையை ஒட்டி தியேட்டர் பாக்ஸ் ஆபிஸ் ஃபுல் ஆகுதோ இல்லையோ ஆம்னிபஸ் வசூல் அமோகமாக இருக்கும்.
பண்டிகையை கொண்டாடும் வகையில் வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பஸ்களை நாடுகின்றனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவிக்க குறிப்பிட்ட எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
1800-45-6151, 044-2474-9002, 044-2628-0445 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
மேலும், அரசுப் பேருந்துகளின் இயக்கம் குறித்து விசாரிக்க அல்லது புகார் தெரிவிக்க 94450 14450/ 94450 14436 என்ற இரண்டு எண்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.