Tap to Read ➤

நெருப்புக்கோழி (Ostrich) பற்றிய ஆச்சரியமான தகவல்கள்!

தீக்கோழி பற்றி அறிந்திடாத தகவல்கள் !!
Sidhanathan K
நெருப்புக்கோழி பறவை இனங்களில் மிகப் பெரிய உயிரினம். நெருப்புக்கோழி நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை.
நெருப்புக்கோழி 63 முதல் 145 கிலோ எடை கொண்டது. இது சுமார் 2.5 மீட்டர் அதாவது 8 அடி வரை உயரமாக வளரக்கூடியது.
இவையால் தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை 70 km/h (43 mph) வேகத்தில் ஓட முடியும். ஒரு மாத வயதுள்ள நெருப்புக்கோழி மணிக்கு 55 கிமீ (35 மைல்) வேகத்தில் ஓடக்கூடியவை.
சிறிய உடலமைப்புள்ள மனிதர்கள் சவாரிசெய்யக் கூடிய அளவுக்குத் தீக்கோழிகள் பெரியவையாகும்.
வட ஆப்பிரிக்கா மற்றும் அரேபியாவின் சில பகுதிகளில் இவை ஓட்டப் பந்தயங்களில் பயன்படுத்தப்பட்டன.
நெருப்புக்கோழியின் கால்கள் மிகவும் நீண்ட அளவுடையது. நெருப்புக்கோழிகளின் கால்களில் 2 விரல்கள் மட்டுமே இருக்கும்.
நெருப்புகோழிகள் குளிர் பிரதேசங்களில் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. தோல் பொருட்கள் தயாரிக்கவும், அலங்கார பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
இதன் முட்டைகள் குஞ்சு பொரிக்க 42 முதல் 46 நாட்கள் ஆகும். தீக்கோழி முட்டைகள் உலகின் மிகப்பெரிய முட்டை ஆகும். முட்டையின் எடை 1.4 கிலோ மற்றும் 15 செ.மீ.
நெருப்புக்கோழிக்கு பற்கள் இல்லை. மேலும் இவை 40- 45 ஆண்டுகள் வரை வாழும்.
தீக்கோழிகள் தாவரங்கள், விலங்குகள், கிழங்குகள், இலைகள், பழங்கள், வெட்டுக்கிளிகள், பூச்சிகள், பாம்புகள், பல்லிகள் மற்றும் ஊர்வன ஆகியவற்றை விரும்பி உண்ணுகின்றன.
ஆண் தீக்கோழிகள் கருப்பு நிறத்திலும், பெண் தீக்கோழிகள் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.