Tap to Read ➤

நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்பவர்கள் முதுகு வலியிருந்து தப்பிக்க வழி!

இதற்கான எளிய தீர்வுகள்!
varalakshmi n
இன்றைய இளைய தலைமுறையினர் முதல் வயதான முதியவர்கள் வரை இடுப்பு வலியால் அவதிப் படுபவர்கள் ஏராளம்
கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்களுக்கு முதுகுத் தண்டுவடம் ,இடுப்பு வலியால் அவதிப் படுகிறார்கள்,முறையான உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் அடிக்கடி இருக்கையை விட்டு எழுந்து செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்
நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் உயரத்திற்கு ஏற்ப மேஜையின் உயரத்தை மாற்றிக் கொண்டு மேஜைகளையும் பயன்படுத்த வேண்டும்
தினமும் வேலை முடிந்ததும் உடற் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
இதற்கான சில எளிய தீர்வுகள் என்ன என்பதை பார்க்கலாம்
கொள்ளு ரசம் வைத்துக் குடித்தால் இடுப்பு வலி நீங்கும் உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் வயிற்று வலி நீங்க வெந்தயத்தை பொடி செய்து அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்
வெள்ளைப் பூண்டு மற்றும் கருப்பட்டி இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்
மிளகை வறுத்து அதில் எள் எண்ணெய் கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்
உணவில் உளுந்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் இடுப்பு வலி சரியாகும்,உளுந்தை களி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குறையும்