நட்ஸ் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த வால்நட்ஸ் மிக முக்கியமான ஒன்றாகும். இவற்றில் பல நன்மைகள் இருந்தாலும், அதிகமாக உட்கொள்ளும்போது சில பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
வால்நட்ஸை சில பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம் என கூறப்படுகிறது. அந்தவகையில், வால்நட்ஸ் சாப்பிடக்கூடாதவர்கள் யார் யார் என்பதை இங்கே காணலாம்.
வயிற்று எரிச்சல் மற்றும் புண்கள் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் முடிந்தவரை வால்நட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடலில் அதிக ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உருவாகின்றன.
நட்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் வால்நட் சாப்பிடக்கூடாது. அவற்றை அதிகமாக சாப்பிடுவது தடிப்புகள் அல்லது படை நோய் போன்ற தோல் பிரச்சனைகளையும், சுவாசிப்பதில் சிரமம் போன்ற சுவாச பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
அதேபோல, ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வால்நட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிக எடை கொண்டவர்கள் வால்நட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிகமாக சாப்பிடுவது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
வாயு பிரச்சனை உள்ளவர்கள் வால்நட்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் வால்நட்ஸ் உட்கொள்வதை குறைக்க வேண்டும்.