Tap to Read ➤

மூலம் நோயிலிருந்து நிரந்தரமாக மீள்வது எப்படி?

கட்டுப்பாடான உணவால் மூலம் நோயிலிருந்து விடுபடலாம்.
HTML Tamil
மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான  மூலம் நோய் வந்துவிடும்.
உடல் சூடு மற்றும் உணவில் அதிகப்படியான கார மசாலாவை சேர்த்துக் கொள்பவர்களுக்கு மூலம் நோய் பாதிப்பு வர அதிக வாய்ப்புள்ளது
உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் நேரத்திற்கு சாப்பிடாதவர்களுக்கு மூலம் நோய் வர வாய்ப்புண்டு.
மூலம் நோய் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சரியாக உட்கார முடியாமல் தவிப்பதோடு, எப்போதும் டென்சனாகவே இருப்பர்.
பப்பாளிபழம் மற்றும் மாம்பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும்.
மூலக்கடுப்பு மற்றும் எரிச்சல் தீர, சுண்டைக்காயை உணவில் சமைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
முள்ளங்கி ஜூஸை தினமும் காலை மற்றும் மாலையில் அரை கப் தொடர்ந்து குடித்து வந்தால் மூலம் நோய் குணமாகும்.
மாதுளைப் பழத்தின் தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனை நாள்தோறும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் மூலம் நோய் சரியாகும்.
உலர்ந்த அத்திப்பழத்தை, இரவில் ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலை, மாலைஇருவேளை குடித்தல், மூலம் பிரச்சனை சரியாகும்.
மூலத்தால் ஏற்படும் ரத்தப் போக்கை சரிசெய்ய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். இதனால், மலவாயில் ஏற்படும் வலியும் குறையும்.
ஓட்ஸ், பார்லி, உளுந்து ஆகியவற்றில் தினமும் ஒன்றை கஞ்சியாக காய்ச்சி குடித்து வரலாம்.
நார்ச்சத்துள்ள கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகும்.
மூலம் நோய் உள்ளவர்கள், வெண்டைக்காய், தக்காளி, கேரட் மற்றும் வெந்தயம், கொண்டைக்கடலை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.