Tap to Read ➤

இந்த விடுமுறையை கழிக்க எங்கு செல்லலாம் ?

கோவையை சுற்றி இருக்கும் டூரிஸ்ட் ஸ்பாட்கள் !!
Sidhanathan K
பொதுவாக கோயம்புத்தூரை சுற்றி பல சுற்றுலா தலங்கள் உள்ளன. நீலகிரி, ஊட்டி, குன்னூர் மற்றும் பல.
கோவை கொண்டாட்டம் தீம் பார்க்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த தீம் பார்க் பேரூரிலிருந்து 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
வைதேகி வாட்டர் பால்ஸ்

கோயம்புத்தூர் நகரில் இருந்து கிட்டத் தட்ட 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல சிறப்பு அனுமதி வேண்டும் என்று கூறப்படுகிறது.
வெள்ளயங்கிரி மலை

ட்ரெக்கிங் செய்ய விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த ஸ்பாட். தரையிலிருந்து கிட்டத்தட்ட 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை கோவையிலிருந்து சுமார் 38 கி.மீ தொலைவில் உள்ளது.
கோவை குற்றாலம் வாட்டர் பால்ஸ்

குற்றாலத்தை போன்று அமைந்துள்ள இந்த சிறுவாணி வாட்டர் பால்ஸ் வெள்ளையங்கிரி மலை பகுதியிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மங்கி பால்ஸ்

கோயம்புத்தூரில் இருந்து 60 கிமீ தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து 30 கிமீ தொலைவிலும் குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. ஆழியார் அணைக்கு அருகில் அமைந்துள்ள இந்த இடம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.
ஈஷா யோகா மையம்

கோயம்புத்தூருக்கு 30 கி.மீ மேற்கே, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது.இங்கு 112 அடி (34 மீ) உயரம் கொண்ட சிவன் சிலை உள்ளது.
பிளாக் தண்டர்

கோயம்புத்தூரில் இருந்து வடக்கே 40 கிமீ தொலைவில் அவினாசி சாலையில் அமைந்துள்ள இந்த தீம் பார்க் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் 49 விளையாட்டுக்களுடன் அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு ஏற்ற பல விளையாட்டுகள் உள்ளன
கோவை பரளிக்காடு

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் 70 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த இயற்கை எழில் மிகுந்த இடம். இங்கு செல்ல முன்பதிவு அவசியம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆழியார் அணை

பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள இந்த கடல் போன்ற நீர்த்தேக்கம் கோவையில் இருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது. பூங்கா, மீன் காட்சியகம், தீம் பார்க் போன்ற பொழுதுபோக்குகள் இங்கு அமைந்துள்ளன.