Tap to Read ➤

இரு கால்கள் இல்லாத வீரர் கின்னஸ் சாதனை!

சாதனைக்கு உடல் தடையில்லை என்பதை அமெரிக்க வீரர் நிரூபித்துள்ளார்.
HTML Tamil
அமெரிக்காவைச்  சேர்ந்த சீயோன் கிளார்க் என்ற மாற்றுத் திறனாளி வீரர், 2 கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
மாற்றுத்திறனாளி பிரிவில், மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தயத்தில் பங்கேற்கும் வீரராக சீயோன் கிளார்க் உள்ளார்.
விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காகசீயோன் கிளார்க் விடா முயற்சியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சீயோன் கிளார்க், தனது கைகளால், 4.78 செகண்டில் 20 மீட்டர் தூரம் வரை விரைவாக நடந்து ஏற்கெனவே கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அதே மன உறுதியுடன் தற்போது, மேலும் 2 கின்னஸ் சாதனையை படைத்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார் சீயோன் கிளார்க்.
Highest box jump மற்றும் Diamond Pushups ஆகிய விளையாட்டுகளில் கின்னஸ் சாதனை படைத்து சீயோன் கிளார்க் அசத்தியுள்ளார்.
உடலின் கீழ் பாகம் இல்லாமல், மேல் பாகங்களை மட்டுமே வைத்தே சீயோன் கிளார்க் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பாரீஸ் நகரில் 2024-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்பதே சீயோன் கிளார்க்கின் குறிக்கோளாகும்.
மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தயத்தில் பங்கேற்று அமெரிக்க தடகள வீரராக வேண்டும் என்பதே சீயோன் கிளார்க்கின் லட்சியமாகும்.
தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால், சாதனை படைக்க உடல் ஒரு தடை அல்ல என்பதை சீயோன் கிளார்க் நிரூபித்துள்ளார்.