Tap to Read ➤

மத்திய அரசின்/பிரதமரின் வீடு கட்டும் திட்டம் பற்றிய சில தகவல்கள்

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் (PMAY)..!!
Sidhanathan K
இந்த பிரதான் மந்திரி திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டது மற்றும் வீடற்றவர்களுக்கு வீடுகள் கட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 2022ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் வீடுகள் கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 40 சதவீதம் மாநில அரசும் மீதம் 60 சதவீதம் மத்திய அரசும் செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்திற்கு ரூ.912 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது
இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2.3 லட்சம் முதல் ரூ.2.75 லட்சம் வரை மானியமும், ரூ.12 லட்சம் வரை கடன் தொகையும் வழங்குகிறார்கள்.
தற்போதைய வீட்டுக் கடன் வட்டி விகிதம் சுமார் 8.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்த மானியம் வீடு வாங்குபவர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும்.
PMAY-U இல் உள்ள தகவலின்படி, இந்தத் திட்டத்தின் கீழ் மே 9 2022 வரை 1.21 கோடி வீடுகள் அனுமதிக்கப்பட்டு, அவற்றில் 58.82 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
BLC (பயனாளிகள் தாங்களாகவே கட்டிக் கொள்ளுதல்) திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 28.17 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
மீதமுள்ள 30.65 லட்சம் வீடுகள் ISSR, CLSS மற்றும் AHP ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கட்டப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் முதல் நிபந்தனை, வேறு நிலமோ, வீடுகளோ இருக்கக்கூடாது.
உங்கள் பிரிவுக்கு ஆண்டு வருமானம் விகிதாச்சாரத்தில் அதிகமாக இருக்கக்கூடாது.
அரசு வேலையில் உள்ள நபர்கள் கண்டிப்பாக அப்ளை செய்ய முடியாது.
பசுமை வீடு திட்டம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே வீடுகள் வாங்கி இருந்தால் இந்த திட்டம் அவர்களுக்கு எலிஜிபிள் இல்லை.