Tap to Read ➤

தமிழ் சினிமாவில் பிரபலமான மும்பை கேங்ஸ்டர் திரைப்படங்கள் ..!!

மும்பை கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் கலக்கிய திரைப்படங்களின் பட்டியல் !!
Sidhanathan K
மும்பை டான் போன்ற தமிழ் படங்களில் கேங்ஸ்டர் கேரக்டர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் முன்னணி கேங்ஸ்டர் கதாபாத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த படங்கள் அடங்கும்.
1. நாயகன் - வேலு நாயக்கர்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ், நாசர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம்.
2. பாட்ஷா - மாணிக் பாட்ஷா

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் நடித்த கேங்ஸ்டர் திரைப்படம்.
3. ஜனா - ஜனா

2004 -ல் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அஜித்குமார், சினேகா, ராதாரவி, மனோஜ் கே ஜெயன், ரகுவரன், கருணாஸ், மனோரமா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்.
4. தலைவா - விஷ்வா பாய்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆகஸ்ட் 2013 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய்யும், அமலா பாலும் நடித்துள்ளனர்.
5. அஞ்சான் - ராஜு பாய்

லிங்குசாமி இயக்கத்தில் 2014 இல் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால், சூரி மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடித்துள்ளனர்.
6. காலா - காலா

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேஷி நடித்த அதிரடி திரைப்படம். கபாலிக்கு பிறகு ரஜினி, ரஞ்சித் கூட்டணியில் உருவாகிய இரண்டாவது திரைப்படம்.
7. கே ஜி எஃப் - ராக்கி பாய்

கே ஜி எஃப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம்.
8. வெந்து தணிந்தது காடு - முத்து பாய்

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம்.