Tap to Read ➤

கருப்பையில் குழந்தையின் நிலைகளும் அவற்றின் அர்த்தங்களும்..!!

கருப்பையில் இருக்கும் குழந்தையின் பிரசவ நிலை!
Sidhanathan K
பெரும்பாலான தாய்மார்கள் குழந்தை பிறப்பதற்கு முன், வயிற்றிலுள்ள தங்கள் குழந்தையின் நிலைகளை அறிந்து கொள்வது அவசியம்.
ஆனால் மகப்பேறியல் நிபுணர்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
எனவே இந்த தொகுப்பில் கர்ப்ப காலத்தில் குழந்தையின் பல்வேறு நிலைகள் பற்றி பார்க்கலாம்.
பிரசவ தேதி நெருங்கும் சமயத்தில் கடைசி மூன்று மாதங்களில் உங்கள் குழந்தையின் நிலை மிகவும் முக்கியமானது.
1. செபாலிக் (Cephalic) நிலை

இந்த நிலை பிரசவத்திற்கு ஏற்றது என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் குழந்தை தலைகீழாக இருக்கும். இதனை Vertex position என்றும் அழைப்பார்கள்.
அதாவது குழந்தையின் தலை பெண்ணின் பிறப்புறுப்பில் சரியான நிலையில் திரும்பி இருப்பதை குறிப்பதாகும்.
இந்த நிலையில் குழந்தையின் தலை திரும்பிவிட்டது என்றால் 97% உங்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
அத்தகைய காலங்களில் நாற்காலியில் உட்காருவதைத் தவிர்த்துவிட்டு தரையில் அமரவும். அதேபோல் குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய வேண்டும்.
2. பிரீச் (Breech) நிலை

பிரசவ வலி வந்ததும் குழந்தை, தானாகத் தலைகீழாகத் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பாமல் போனால் பிரீச் பொசிஷன்’ என்பார்கள்.
இந்த நிலையில் முதலில் குழந்தையின் தலை வெளிவருவதற்குப் பதிலாக, கால் மற்றும் புட்டம் வெளியே வரும். இந்த பொசிஷனில் பல குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன.
ஆனால் தலை கடைசியாக வெளிவருவதால் மூளைக் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே இந்த நிலை இருந்தால் சிசேரியன் பரிந்துரைக்கப்படுகிறது.
3. ட்ரான்ஸ்வெர்ஸ் (Transverse) நிலை

குழந்தை கருப்பையில் வழக்கமான தலை-கீழ் நிலையை விட வயிற்றில் கிடைமட்டமாக (பக்கவாட்டாக) படுத்திருக்கும் நிலையாகும்.
இந்த நிலை அரிதானது. ஏறத்தாழ 300 குழந்தைகளில் 1 குழந்தை இந்த நிலையில் இருக்கலாம்.
மருத்துவர்கள் குழந்தையைத் திருப்ப முயற்சிப்பார்கள் அல்லது சிசேரியன் பிரிவைத் தேர்வு செய்வார்கள்.