Tap to Read ➤

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொட்டுக்கடலையின் நன்மைகள்

பெண்களுக்கான சிறப்பான நன்மைகள் என்னென்ன ?
Sidhanathan K
பொட்டுக்கடலை பருப்பு வகையை சேர்ந்தவை. இதை உடைத்த கடலை என்றும் சொல்வார்கள்.
தினமும் பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும்.
இதயம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வதில் பொட்டுக்கடலை முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் ஆகுவதற்கு பொட்டுக்கடலை சிறந்தது. ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
மேலும் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு உகந்த வளர்ச்சி மற்றும் தசை வலிமையை அடைய இந்த பொட்டுக்கடலை பெரிதும் உதவுகிறது.
இந்த பொட்டுக்கடலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாப்பிடுவதால் முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்து முடி வளர்ச்சியை தருகிறது.
மெலிந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பொட்டு கடலை சாப்பிடுவதால் உடல் எடை கூடுகிறது.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, தினமும் பொட்டுகடலை சாப்பிடுவது குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
ஒரு பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.