Varalakshmi N       Jun 04, 2026

கர்ப்பிணிகள் கவனிக்கவும்! எந்த மாதத்தில் எவ்வளவு எடை அதிகரிக்க வேண்டும்?

AI-IMAGE

கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்று. ஆனால் எந்த காலகட்டத்தில் எவ்வளவு எடை அதிகரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது, தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க மிகவும் முக்கியமானது.

1. முதல் 0–14 வாரங்கள்: இந்த காலகட்டத்தில் பொதுவாக உடல் எடை அதிகரிப்பு அதிகமாக இருக்காது. சுமார் 10வது வாரத்திலிருந்து ஊட்டச்சத்து தேவைகள் அதிகரிக்கத் தொடங்கும்.

14வது வாரத்திற்குப் பிறகு பசி உணர்வு இயல்புநிலைக்கு திரும்பும்.       அந்த நேரத்தில் விருப்பமான உணவுகளை அளவோடு சாப்பிடத் தொடங்கலாம்.

2. 14–20 வாரங்கள்: இந்த காலகட்டத்தில் சுமார் 2.3 கிலோ வரை எடை அதிகரிப்பது இயல்பாக கருதப்படுகிறது.

இதற்கு மேல் அதிகரித்தால் கர்ப்ப சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு       அதிகரிக்கலாம். இது தாயின் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தையும்       பாதிக்கக்கூடும்.

3. 20–30 வாரங்கள்: இந்த காலகட்டத்தில் மொத்தமாக சுமார் 4.5 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.

இந்த நேரத்தில் உடல் எடையை குறைப்பது சிரமமாக இருக்கும். எனவே ஆரம்பத்திலிருந்தே உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது அவசியம்.

4. 30–36 வாரங்கள்: இந்த காலத்தில் சுமார் 2.3 கிலோ வரை எடை அதிகரிப்பது இயல்பாகும்.

5. 36–40 வாரங்கள்: இது மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இந்த நேரத்தில் குழந்தை எந்த       நேரத்திலும் பிறக்கக்கூடும் என்பதால் தேவையற்ற உடல் எடை அதிகரிப்பை தவிர்க்க வேண்டும்.

சில முக்கிய எச்சரிக்கைகள்: உடலில் அதிக நீர்ச்சத்து சேர்வது,       ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் உடல் மாற்றங்கள், உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வது இவை அனைத்தும் கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.

எனவே கர்ப்பிணிகள் எப்போதும் உணவு மற்றும் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் சரியான அளவு உடல் எடை அதிகரிப்பது, தாயின்       உடல்நலத்திற்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் முக்கிய       பங்காற்றுகிறது.