வாய் அல்லது தொண்டை திசுக்களில் தோன்றும் ஒரு வகை புற்றுநோய் வாய்வழி புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இது நாக்கு, ஈறுகள், உதடுகள், கன்னத்தின் புறணி மற்றும் வாயின் அடிப்பகுதியை பாதிக்கலாம்.
வாய்வழி புற்றுநோயை கண்டறிந்து உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அந்தவகையில், வாய் புற்றுநோயை கண்டறிய உதவும் சில அறிகுறிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆறாத வாய் புண்கள்.
வாயில் அசௌகரியம் அல்லது வலி .
உதடுகளில் வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள்
விழுங்குவதில் அல்லது சாப்பிடுவதில் சிரமம்.
வாயில் உள்ள திசுக்களில் கட்டி அல்லது தடித்தல்.
தொண்டையில் புண் அல்லது எரிச்சல்.