Tap to Read ➤

பூண்டை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

மருத்துவ குணம் கொண்ட பூண்டை அதிகம் உண்டால் சில பாதிப்புகள் ஏற்படும்.
HTML Tamil
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு, மருத்துவ குணம் கொண்டது. பல நோய்களை தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு.
பூண்டில் அதிக அளவு தாதுக்களும், வைட்டமின்களும், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பதற்கு ஏற்ப, பூண்டை அதிகளவு உட்கொண்டால், உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
பூண்டை அதிகம் உண்டால், செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். மலச்சிக்கல், வீக்கம், அமிலத்தன்மையை உண்டாக்கி விடும்.
அதிகமாக பூண்டை சாப்பிட்டால், இதிலுள்ள அல்லிநேஸ் என்னும் என்சைம், சருமத்தில் அரிப்பு மற்றும் வீக்கத்தை உண்டாக்க வாய்ப்புண்டு.
சமைக்காத பூண்டை அதிக அளவில் உட்கொண்டால், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்கும்.
பூண்டில் அல்லிசின் கலவை அதிகம் இருப்பதால், அதிகம் உண்டால், கல்லீரலில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரித்து, கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பூண்டு உடலில் பலவீனம் மற்றும் சோர்வை ஏற்படுத்தி விடும்.
பூண்டில் அமில கலவைகள் உள்ளதால், பூண்டை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.
பூண்டை அதிகம் சாப்பிடும்போது வாயு உருவாகி, உணவுக் குழாயின் உள் புறத்தில் எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி விடும்.