Tap to Read ➤

மொபைலில் லோன் ஆப் மூலம் கடன் வாங்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது ?
Sidhanathan K
சமீபகாலமாக ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் கடனைப் பெறுவதை எளிதாக்கும் லோன் ஆப்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும் நொடிப்பொழுதில் அக்கவுண்டிற்கு பணம் வந்துவிடும்.
லோன் ஆப் மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் போது தான் பிரச்சனைகள் தொடங்குகிறது.
இந்த லோன் ஆப்கள் தனியார் ஏஜென்சிகள் மூலம் பணம் வசூலிக்கின்றன. அந்த ஏஜென்சிகள் பணம் வசூலிக்க பல்வேறு வகையான மிரட்டல்களை மேற்கொள்கின்றன.
மொபைல் போன்களில் உள்ள கான்டெக்ட் எண்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த ஆப் திருடுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருடப்பட்ட கான்டெக்டுகளுக்கு sms மூலமாகவோ அல்லது வாட்ஸாப் மூலமாகவோ மிரட்டல் விடுகின்றன.
அவர்களின் மிரட்டலால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையை அணுகத் தயங்கக் கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொலைபேசி மிரட்டல்கள் நேரில் வர வாய்ப்பில்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் பீதியடைய தேவையில்லை.
இத்தகைய லோன் ஆப்கள் ஆர்பிஐ விதிகளுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவன கணக்கிலிருந்து வருவதில்லை.
அதுமட்டுமல்லாமல் அரசு அனுமதி இல்லாமல் பல லோன் ஆப்ஸ் உள்ளன.
இருப்பினும் எளிதான லோன் ஆப்களில் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.