Tap to Read ➤

பரோட்டா சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் !!

தினமும் பரோட்டா சாப்பிட்டால் உண்டாகும் விளைவுகள் என்ன ?
Sidhanathan K
பரோட்டா ஆரோக்கியமற்ற உணவாகக் கருதப்படுவதற்குக் காரணம், அதைச் செய்யப் பயன்படுத்தப்படும் மாவு மற்றும் தயாரிக்கும் முறைதான்.
பரோட்டா சாப்பிடும் அனைவருக்கும் சர்க்கரை நோய் வரும் என்று இல்லை.
சிலருக்கு அரிதாக ஏதேனும் பிரச்சனைகள் இருக்கலாம். அதாவது 100 பேர் பரோட்டா சாப்பிட்டால் அதில் இருவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம்.
பரோட்டாவை என்றோ ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிடலாம் ஆனால் தினமும் தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல், அஜீரணம், சர்க்கரைநோய்க்கு முந்தைய 'ப்ரீ டயாபட்டிஸ்' போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ப்ரீ டயாப்பட்டிஸ் நிலை என்பது பெரிதாக அறிகுறிகளைக் காட்டாது. ரத்தப் பரிசோதனையில்தான் தெரியவரும்.
சிலருக்கு மலக்குடல் புற்றுநோய் வரும் ஆபத்தும் இருக்கிறது.
இந்த பரோட்டா செய்ய வெள்ளை கோதுமை என்று அழைக்கப்படும் மைதா பயன்படுத்தப்படுகிறது.
கோதுமையை விட மைதா ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதாவது எளிதில் ஜீரணம் ஆகாது.
மைதாவை மென்மையாக்க அலக்சன் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. அதை உணவில் கலந்து சாப்பிடும்போது சர்க்கரை நோய் வருவது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பரோட்டாவை தவிர அதற்கு ஊற்றப்படும் குழம்பில் அஜினமோட்டோ போன்ற சுவையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன.
இந்த காரணிகளால் பரோட்டா அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும்.