Tap to Read ➤

தொடர்ந்து புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் !!

புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் !!
Sidhanathan K
சிகரெட்டின் துர்நாற்றம் புகைப்பிடிப்பவரின் உடைகள் மற்றும் வியர்வை வழியாக பரவுகிறது.
மூச்சுவிடுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன
தொடர்ச்சியான இருமலும், சிலருக்கு ஒற்றைத்தலைவலியும் தோன்றலாம்.
புகைபிடிக்கத் தொடங்கும் ஒருவருக்கு தொடர்ந்து புகைபிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்பட்டு சங்கிலி போல் புகை பிடிக்கத் தொடங்குவார்.
உதடுகள் மற்றும் பற்கள் கறை மற்றும் நிறமாற்றம் அடையும். சிலருக்கு விரல் நுனியும் மஞ்சள் நிறமாக மாறும்.
அடிக்கடி தொண்டையில் சளி அடைப்பது போன்ற உணர்வு தோன்றுவதால் செருமிக்கொண்டே இருக்க நேரிடும். சிலருக்கு இந்த அடைப்பினால் பேச்சும் தடைபடும்.
புகை பிடிக்கையில் தோன்றும் திருப்தி தற்காலிகமே. பிடித்து முடித்ததும் மீண்டும் பதட்டமும் இறுக்கமும் தோன்றிவிடும்.
சளித்தொல்லை, ஆஸ்த்மா (மூச்சுக்கோளாறுகள்) உண்டாகும். நாளடைவில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
உடலில் நிகோடின் அளவு அதிகரிப்பதால் சில மருந்துகள் உடலில் வேலை செய்யாது.