Tap to Read ➤

நல்ல லாபம் தரக்கூடிய செம்மரம் வளர்ப்பதற்கு சட்ட சிக்கல்கள் இல்லை!

இந்த மரத்தை வளர்க்க,செய்ய வேண்டிய சில விஷயங்கள்!
varalakshmi n
தேக்கு, சவுக்கு போன்ற மரங்களை வளர்ப்பதுகூட,பராமரிப்பு மற்றும் தண்ணீர் தேவையாக இருக்கும்
அதிக தண்ணீர் வசதி தேவைப்படாத வறட்சி நிலையில் வளர்ந்து,நல்ல லாபம் தரக்கூடியது இந்த செம் மரம்
செம்மரங்களை வளர்க்கும்போது, கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கலில் செம்மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று பதிவு செய்யவேண்டும்
செம்மரக் கட்டைகளை விற்பனை செய்யும் போது, மாவட்ட வன அதிகாரியிடம் (District forest officer) இந்த மரத்தை விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற ஒரு விண்ணப்பம் அளிக்க வேண்டும்
செம்மரம் செம்புறைக்கல் என்ற மண்ணில் வளர்ந்தால் மட்டுமே சிவப்பு நிறத்துடன் கூடிய செம்மரம் கிடைக்கும்
இந்த மரத்தை செம்மண், கல் கலந்த மண், செம்மண் கலந்த மண்ணில் வளர்க்கபடும் போது மட்டுமே நல்ல திடமான கட்டை கிடைக்கும்
முதல் பருவ மழைக்கு முன்பாக சுமார் 3 அடி குழி எடுத்துக், 2 ஆம் மழைக்கு முன் நடவு செய்திட வேண்டும்,1 வருடம் வரை மண் ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் போதும்
பூச்சி தாக்குதல் இருக்காது,
15 - 25 வருடம் வரை இந்த மரத்தை வளர்க்கும் போது, மட்டுமே இதில் மருத்துவ குணம் உருவாகும்
அதன் பின் இந்த மரம் ஒன்று 100 கிலோ எடைவரை இருக்கும். 1 கிலோ ரூ.1,000 யும், ஒருமரத்திற்கு ரூ.1,00,000 வரை லாபம் பெறலாம்