Tap to Read ➤

வீட்டில் எலித் தொல்லையா ? எலியை விரட்ட சில வழிகள் ..!!

வீட்டில் உள்ள எலியை விரட்டும் வழிகள்..!
Sidhanathan K
இந்த எலி தொல்லை பெரும்பாலானோர்களின் வீடுகளில் பெரும் பிரச்சனையாக உள்ளது.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகவும் கவனமாக இருக்கவும். குழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் எலிகள் மூலம் பரவக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கலாம்.
லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) எலி சிறுநீர் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த கிருமி மனித உடலில் நுழைந்து மரணத்திற்கு வழிவகுக்கிறது.
ஹெப்படைடிஸ் ஈ, பிளேக் நோய் போன்ற பல கிருமிகள் எலியின் வழியாக மனிதருக்கு பரவக்கூடியவை.
பெரும்பாலும் வீட்டில் எலி வரும் எல்லா இடங்களிலும் அதற்கு பிடிக்காத பொருட்களை வைப்பதன் மூலம் எலியை விரட்டலாம்.
அந்த பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருக்க கூடியவை தான். இதற்கென கடைக்கு செல்ல வேண்டுமென்ற அவசியம் இருக்காது.
2 பாராசிட்டமால் மாத்திரையை நன்றாக அரைத்து அதனுடன் 2 ஸ்பூன் கோதுமை மாவு, கடலை மாவு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து உருண்டையாக உருட்டி எலிகள் வரும் இடத்தில் வைத்தால் கண்டிப்பாக எலி தொல்லை இருக்காது.
பிரியாணி இலையை பொடி செய்து, எலிகள் வரும் இடத்தில் தூவி வந்தால், எலி பிரச்சனை இருக்காது.
எலிகள் வரும் இடங்கள் அனைத்திலும் மிளகு பொடியை தூவி வந்தால் எலி தொல்லை குறையும்.
ஒரு வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, மற்றொரு வெங்காயத்தை வட்டமாக நறுக்கி வெங்காயச் சாற்றில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தால் எலிகள் வராது.
எலிகள் வரும் இடங்களில் லேசாக பேபி பவுடரைத் தூவினால் போதும், இந்த வாடைக்கு எலி தொல்லை இருக்காது.
கட்ட புகையிலையை தூள் செய்து எலி வரும் இடத்தில் வைத்தாலே போதும், இந்த புகையிலை மனத்திற்க்கு அறவே எலிகள் வராது.
ஒரு சிறிய பஞ்சில் புதினா எண்ணெய்யை நனைத்து வீட்டின் மூலை முடுக்குகளில், எலி வரும் இடங்களில் வைத்தால் புதினா வாடைக்கு எலி வராது.
புதினா மனம் எலிக்கு பிடிக்காததால் புதினா செடி கூட வீட்டின் முன் வளர்க்கலாம்.
எலிகள் வரும் இடங்களில் சில துளிகள் விளக்கெண்ணெய்யை ஊற்றினால், விளக்கெண்ணெய்யின் பிசுபிசுப்புத் தன்மையும் வாசனையும் எலிகளை எரிச்சலடையச் செய்து அவைகளை விரட்டிவிடும்.