ராஜா ரவி வர்மா காலத்துக்கு ஏற்ற முறையில் இந்திய உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்
கேரளாவின் திருவிதாங்கூர் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் பிறந்தவர்,சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஓவியத்தையும் உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்
திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார்
அரச குடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார்
இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன
1870 - 1880 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார்
1906 இல் தமது 58ஆவது வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார்
தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார்,பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார்