Tap to Read ➤

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கியின் வழிமுறைகள் !!

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?
Sidhanathan K
கடைகளிலோ அல்லது வேறு இடங்களிலோ கொடுக்க முடியாத நிலையில் உள்ள கிழிந்த ருபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
முன்பு கிழிந்த நோட்டுகளை மாற்ற வேண்டுமானால் மாநகரின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்.
இந்த சிரமத்தினால் கிழிந்த நோட்டுகள் ஒரு புறம் பயன்படுத்த முடியாமல் முடங்கி போய்விட்டன.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளின் அடிப்படையில், அனைத்து வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
கிழிந்த நோட்டுக்களை அதன் கிழிந்துள்ள நிலையை பொறுத்து, எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.
எந்த வங்கியும் கிழிந்த நோட்டுகளை மாற்ற மறுக்க முடியாது. அவ்வாறு செய்யும் வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கப்படும்.
நோட்டின் நிலை மோசமாக இருந்தால், அதன் மதிப்பு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நோட்டுகள் முற்றிலும் கிழிந்திருந்தாலோ அல்லது எரிந்திருந்தாலோ வங்கிகளில் மாற்ற முடியாது, மாறாக ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கு எண், IFSC குறியீடு மற்றும் நோட்டின் மதிப்பை எழுதி, அருகிலுள்ள RBI கிளைக்கு அனுப்பி அதற்குரிய ரூபாய்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதே சமயம் ரூ.1 முதல் ரூ.20 வரையிலான நோட்டுகள் எவ்வளவு கிழிந்திருந்தாலும் அதன் முழு மதிப்புக்கும் வேறு நோட்டுகள் வங்கிகளில் மாற்றித்தரப்படும்.
பழைய ரூபாய் நோட்டுகளை ஒரு நாளைக்கு 20 என்ற எண்ணிக்கை வரை இலவசமாக அனைத்து வங்கியிலும் மாற்றி தரப்படும்
குறிப்பிட்ட அளவிற்கு மேல் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது குறைந்தபட்ச சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.