Tap to Read ➤

வாகனங்களின் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பற்றிய தகவல்கள்

ஏ.பி.எஸ் ஆனது எவ்வாறு செயல்படுகிறது?
Sidhanathan K
ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என்றால் வேறொன்றும் இல்லை வண்டியிலுள்ள டிஸ்க் பிரேக்குகள் தான்.
பொதுவாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் ஏபிஎஸ் பிரேக்குகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக செயல்படும்.
சாலையில் நாம் செல்லும்போது திடீரென பிரேக்கை ஒரே அழுத்தாக அழுத்தினால் என்ன ஆகும் ?
அவ்வாறு செய்தால் வாகனம் ஒரு புறமாக இழுத்து செல்லப்பட்டு கவிழும் நிலை ஏற்படலாம்.
ஏனெனில் ஒரே அழுத்தாக பிரேக்கை அழுத்தினால் அதன் இயக்க நிலையிலிருந்து சில வினாடிகளில் சக்கரங்கள் நின்று விடுவதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
இதை தவிர்க்கும் வகையில் அதற்கு இணையாக சக்கரங்களில் டிஸ்க்குகள் பொருத்தப்படுகின்றன.
விரிவாக சொன்னால், சில பேருந்துகளில் திடீரென்று பிரேக் போட வேண்டியிருந்தால் நான்கைந்து முறை விட்டுவிட்டு பிரேக் பெடலை அழுத்துவார்கள்.
இப்படி அழுத்தும் போது பேருந்து கவிழும் நிலை ஏற்படாது. இதன் அடிப்படையில் தான் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) செயல்படுகிறது.
இது இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பவர் ஸ்டீயரிங் சிஸ்டம் ஆகிய இரண்டும் வாகனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.