பெண்களுக்கு முதல் அழகே அடர்த்தியான மற்றும் கருமையான கூந்தல்தான்
ஆனால் சில பெண்களுக்கு உடல் குளுமையில்லாத காரணத்தினால், கருமையான நிறம் மறைந்து செம்பட்டை நிறமும், வெகு சீக்கிரத்தில் இள நிரையும் வந்துவிடும்
செம்பட்டையான முடி கருமையடைய சில எளிய குறிப்புக்கள் இங்கே பார்க்கலாம், இதை தொடர்ச்சியாக செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்
தேவையான அளவு நெல்லி கனிகளை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு, ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்
காலையில் அந்த நீரில் எலுமிச்சம் பழத்தின் சாறை கலந்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், சில நாட்களிலேயே முடி கருப்பாக மாறும்
வெயில் காலத்தில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் விளக்கெண்ணையை தலைக்கு மசாஜ் செய்து குளித்து வர 2 மாதத்தில் முடி கருமையடைய தொடங்கும்
வாரம் ஒரு முறையாவது முட்டையின் வெள்ளைக் கருவை நுரைக்க அடித்து, தலைக்கு தேய்த்து குளித்து வர செம்பட்டை நிறம் மாறும்
கேரட், பீட்ரூட் சாறு இரண்டையும் சம அளவில் எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து வர முடியின் செம்பட்டை நிறம் மாறும்
முக்கிய குறிப்பு, உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மலசிக்கல், உஷ்ணம் வராமல் பார்த்துக்கொண்டால் இந்த டிப்ஸ் பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்