ராக்ஸ்டார் கேம்ஸ் வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனத்தின் GTA எனப்படும் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ கேம்-ஐ விரும்பாத 90'ஸ் கிட்ஸ்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு அனைவரும் விரும்பி விளையாடக்கூடியது.
ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. இந்நிறுவனம் பல வீடியோ கேம்களை உருவாக்கி வெளியிட்டிருந்தாலும், இதன் அடையாளமாக திகழ்வது GTA கேம்கள் தான்.
வெறும் விளையாட்டாக அல்லாமால் அதில் இருக்கும் கதை மற்றும் சவால்கள் விளையாடுவோரை அந்த கேமுடன் ஒன்றிப்போக செய்துவிடும்.
இந்த விளையாட்டுகளின் PC பதிப்பு தற்போது ரூ.3,299 க்கு விற்கப்படுகிறது. ஜிடிஏ சீரியஸில் Grand Theft Auto 3, Vice City, San Andreas ஆகிய மூன்று கேம்கள் உள்ளன. இந்த கேம்களை மொபைலில் விளையாட தனியாக கட்டணம் கட்ட வேண்டி இருக்கும்.
ஆனால், இது இப்போது நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு மட்டும் இலவசமாக கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐோபன் என்று இரண்டிலும் நெட்பிளிக்ஸ் பயனாளர்கள் இந்த Definitive Edition கேமை விளையாட முடியும்.
டிசம்பர் 14ஆம் தேதி முதல் இதை நெட்பிளிக்ஸ் பயனர்கள் விளையாட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு GTA: The Trilogy அதிகாரப்பூர்வமாக கிடைக்கிறது.