Tap to Read ➤

மன  அழுத்தத்தை போக்குவதற்கான  தீர்வுகள்  என்ன?

உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளவோம்.
HTML Tamil
வாழ்க்கையில் தோல்வி, ஏமாற்றம் அடையும்போது மனம் அழுத்தம் ஏற்படுகிறது.
மனதை பாதிக்கக்கூடிய பிரச்சனைக்குத் தீர்வு காண விரைவில் முயற்சி எடுக்க வேண்டும்.
பிரச்சனையை நெருங்கிய நண்பர்களில் யாரேனும் ஒருவரிடம் தெரிவித்து மன அழுத்தத்தை முறியடிக்கலாம்.
மனதைக் காயப்படுத்திய செயல்களையும், நபர்களையும் மறப்பதற்கு முயற்சி மேற்கொண்டால் இதற்கு தீர்வு கிடைக்கும்.
மன அழுத்தத்தை சரிசெய்ய உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி மன அழுத்தத்திற்கு தீர்வு காணலாம்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட பிடித்த இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம். பிடித்த நபர்களுடன் நேரத்தை செலவழிக்கலாம்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, பழைய நிலைக்குத் திரும்புவதற்கு நண்பர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் உதவியை நாடலாம்.
மன அழுத்தம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் மனநல மருத்துவரை உடனடியாக அணுகி அதில் இருந்து விடுபடலாம்.