Tap to Read ➤

பற்களில் மஞ்சள் கறை இருந்தால் எப்படி சரி செய்வது?

பற்களை முறையாக பராமரித்து வந்தால் மஞ்சள் கறை ஏற்படாது.
HTML Tamil
பற்கள் பளிச்சென்று வெள்ளையாக இருப்பது அழகின் ஒருபகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், சுகாதாரத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
பற்களை சரியாக சுத்தம் செய்யாதது, புகைப்பிடித்தல், மது அருந்துதல் காஃபி, டீ அருந்துதல் போன்றவை மஞ்சள் கறைக்கு காரணங்களாகும்.
பற்களிலுள்ள மஞ்சள் கறையை, வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே எவ்வாறு சரி செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
தினமும் 2 கொய்யா இலைகளை வாயில் போட்டு நன்றாக மென்று, பின்னர் அவற்றை, வாயில் இருந்து அகற்றிவிடவேண்டும்.
கற்றாலை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.
பல் துலக்கும்போது, எலுமிச்சைச் சாற்றோடு, சிறிது உப்பு சேர்த்து, பற்களில் கறைபட்ட இடத்தில் தேய்த்து, கொப்பளிக்க வேண்டும்.
தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் அடைவதுடன், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளும் நீங்கிவிடும்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கினால், மஞ்சள் கறை நீங்கி விடும்.
தினமும் காலையில் நல்லெண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்து, வாய் கொப்பளிப்பக்கலாம்.
உப்பை அளவோடு எடுத்து, தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.
எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் வாழைப் பழங்களின் தோல்களை பற்களின் மேல் தேய்த்து வந்தால் மஞ்சள் கறைகள் மறைந்துவிடும்.
சாப்பிட்டு முடிந்தவுடன், தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து, வாய் கொப்பளித்தால் மஞ்சள் கறைகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.