இந்தியாவில் முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதன்படி, இந்தியாவில் மொத்தமாக ஏற்படும் உயிரிழப்புகளில் சுமார் 28 சதவீதம் பேரின் மரணத்துக்கு மாரடைப்பே காரணம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, தினமும் புகைபிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களை விட, போதுமான உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல, காய்கறி மற்றும் பழங்களை தேவையான அளவு உணவில் எடுத்துக்கொள்ளாத 98.4 சதவீதம் பேருக்கும் இதய நோய்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதய பரிசோதனை செய்து கொள்ளாமல் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவது, ஜிம்மில் எடை தூக்குவது, டிரெட்மில், கிராஸ் வொர்கவுட் பயிற்சி போன்றவற்றை செய்வதும் இதற்கு ஒரு காரணமாம்.
உணவு பழக்கங்களை தாண்டி அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சமயத்திலும் இதய துடிப்பு அதிகரித்து பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மிக முக்கியமாக புகைபிடித்தல் மற்றும் மது பழக்கத்தை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தும் மருத்துவர்கள், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்கள் சாப்பிடுவதையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
எனவே உடலிலுள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்க உடல் உழைபு கட்டாயம். அதை செய்யாததால்தான் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக 2018ஆம் ஆண்டில் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.