Tap to Read ➤

நீண்ட நேரம் வேலை செய்தால் ஆபீஸ் சிண்ட்ரோம் அபாயம் !!

இந்த நோய் குறியீட்டுக்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்..!!
Sidhanathan K
நீண்ட நேரம் வேலை செய்யும் பல இளைஞர்கள் ஆபிஸ் சிண்ட்ரோம் எனப்படும் நோய்க்குறியால் பாதிக்கப்படுவதாக மருத்துவத் துறையில் செய்திகள் வெளியாகி உள்ளன.
அலுவலக பணிகளில் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது மற்றும் சரியான முறையில் அமராமல் வேலை செய்வது போன்றவற்றால் ஏற்படும் அதிகப்படியான வலிகளே ஆபீஸ் சிண்ட்ரோம்.
ஆபீஸ் சிண்ட்ரோம் என்பது நோய் அல்ல. அது பிற எலும்பு, நரம்பு தொடர்பான நோய்களுக்கு வித்திடும் நோய்குறியீடு.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வாரத்திற்கு 55 மணிநேரம் வேலை செய்பவர்கள் அதிக வேலை காரணமாக இறக்கும் வாய்ப்பு அதிகம்.
எட்டு மணி நேரத்திற்கும் மேலாக, 14 மணி நேரம் வரை உட்கார்ந்த நிலையில் வேலை செய்வதால் அதிகப்படியான முதுகு, கழுத்து, தோள்பட்டை மற்றும் முழங்கால் வலி, விரல்கள், கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை ஏற்படலாம்.
தசை வலி, டென்னிஸ் எல்போ போன்ற தசைநார் பகுதியில் வலி, தலைவலி, வறண்ட கண்கள், தலைசுற்றல், மனச்சோர்வு, தூக்கமின்மை, நாள்பட்ட உடல்சோர்வு போன்றவை ஆபீஸ் சிண்ட்ரோமின் அறிகுறிகள் ஆகும்.
ஆபீஸ் சிண்ட்ரோம் அறிகுறிகளை கவனிக்காமல் போனால், தண்டு வட பாதிப்பு, மூட்டு பாதிப்பு மற்றும் முதுகு எலும்பு அலர்ஜி என்று சொல்லப்படும் ஸ்பாண்டிலைட்டிஸ் உள்ளிட்டவை ஏற்படும்.
அலுவலக நோய்க்குறியைத் தடுப்பதற்கான முதல் படி, நமது வேலை நேரம் மற்றும் நமது ஆரோக்கியத்திற்கான நேரத்தைத் தீர்மானிப்பதாகும்.
முதலில் நாம் அமர்ந்திருக்கும் நாற்காலி சரியான நிலையில் உள்ளதா என சரிபார்க்கவும். பொதுவாக எர்கோனோமிக்ஸ் நாற்காலி உபயோகிப்பது நல்லது.
கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் அல்லது உட்கார்ந்து வேலை செய்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து சிறிது தூரம் நடப்பது மிகவும் அவசியம்.
கண்களை மூடி சில நொடிகள் கழித்து விழிப்பது, கை கால்களை அசைப்பது போன்ற எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
தொடர்ந்து ஒரு மாதம் யோகா பயிற்சிகளை செய்வதன் மூலம் பலவிதமான மாற்றங்களை உணர முடியும்.
ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் மற்றும் பழங்களை உட்கொள்வது அவசியம்.
ஆபீஸ் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வு மற்றும் உடற்பயிற்சி நிவாரணம் அளிக்கும்.
ஆனால் நீண்ட காலம் கவனிக்காமல் இருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சைகள் தேவைப்படலாம்.