Tap to Read ➤

கொடைக்கானலுக்கு வரப்போகிறது ரோப் கார் சேவை..!!

மத்திய அரசு அறிவித்த ரோப்வே திட்டங்கள்..!!
Sidhanathan K
பல்வேறு மாநிலங்களில் கிட்டத்தட்ட 90 கி.மீ., நீளத்திற்கு 18 ரோப்வே திட்டங்களை அடுத்த சில மாதங்களில் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீநகர், சங்கராச்சாரியார் கோயில், ஸ்ரீசைலம், உஜ்ஜயினி மகாகாலேஸ்வரர் கோயில், வாரணாசி, கேதார்நாத், பழனி - கொடைக்கானல் இடையே ரோப்வே சேவை தொடங்கப்படும்.
இதில் குறிப்பாக தமிழகத்தில் வரவிருக்கும் பழனி மலைக் கோயில் முதல் கொடைக்கானல் வரை ரோப்வே திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே 12 கி.மீ தூரம் கொண்ட ரோப் கார் சேவையே மிக நீளமான ரோப்வே சேவையாகும்.
முதற்கட்டமாக பழனி மலை மற்றும் கொடைக்கானல் மலைகள், குரூப் கார் ஸ்டேஷன் அமையும் இடங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
பழனி முதல் கொடைக்கானல் வரையிலான ரோப்வே சேவையின் முழுப் பணிகளும் ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோப் காரில் ஒரே நேரத்தில் 100 முதல் 1000 பயணிகள் பயணம் செய்யலாம்.
பழனி - கொடைக்கானல் இடையே ரோப்கார் சேவையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, இரட்டிப்பு வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.