ரோஸ்மேரி எண்ணெய் பல நூற்றாண்டுகளாக அழகுக்காகவும் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது
மத்தியதரைக் கடல் மற்றும் துணை இமயமலைப் பகுதிகளில் வளரும் ஊசி போன்ற இலைகளைக் கொண்ட நறுமணமுள்ள பசுமையான புதர்.
இதன் பூக்கள் இளஞ்சிவப்பு, வெள்ளை, ஊதா அல்லது நீல நிறம் கொண்டவை.
ரோஸ்மேரி நரம்புத் தடுப்பு, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பி, ஒவ்வாமை எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் வலி நிவாரணி போன்றவற்றிற்காக பயன்படுகிறது.
இவை நுரையீரலில் ஏற்படும் தொற்றை குறைக்கிறது.
இது சரும ஆரோக்கியம் மற்றும் முகப்பரு தடுப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
பொடுகுத் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் தலை வழுக்கை உள்ளவர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
சீரம் கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலமும், மூளையில் டோபமைன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் மன சோர்வு குறைகிறது.
பலவீனமான மூளை உள்ளவர்கள் ரோஸ்மேரியை உள்ளிழுக்கும்போது அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்த முடியும்.
இதில் உள்ள கேம்பர் மற்றும் ரோஸ்மேரினிக் அமிலம் தலைவலி, மூட்டு வலி மற்றும் தசைவலி ஆகியவற்றிற்கு வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.