Varalakshmi N       Mar 25, 2025

உடலுக்கு சக்தியை தரக்கூடிய சாத்துக்குடி பழச்சாறு!

சாத்துக்குடி பழத்தை சுளையாக, சாறாகவோ சாப்பிடுவதால் வைட்டமின்  சி உடலுக்கு கிடைக்கிறது

இனிப்பான சுளைகள் கொண்டிருக்கும் இப்பழம் உடலுக்கு மிகுந்த சக்தி  தரக்கூடியது. காய்ச்சல் மற்றும் களைப்பு நீங்க இப்பழத்தை சாப்பிட்டு வர  உடலுக்கு தெம்பையும் அளிக்கும்

இப்பழ சாற்றை தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம், தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்தும்

அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும், ரத்த ஓட்டத்தை சீர்படுத்த, ரத்த விருத்தியை அளிக்கும்

இதனால் பற்கள் பலம் பெறும், பற்களுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும்,  பல்வலி, ஈறு வலி போன்றவை ஏற்படாது, எலும்பு சம்பந்தமான நோய்கள் குறைகிறது

வயிற்றுப்புண் உள்ளவர்கள் தொடர்ந்து காலையில் பழச்சாற்றை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஆறிவரும்

தவிர வாயுத்தொல்லை, அஜீரணம், கண் நோய்களை தீர்க்கும், கண்களுக்கு நலம் பயக்கும் இப்பழம் உதவுகிறது