Tap to Read ➤

சவூதியில் 'ஆமை' வடிவில் தயாராகும் மிதக்கும் நகரம்..!!

சவூதி அரசு மிகப்பெரிய  கப்ப உருவாக்குகிறது.
HTML Tamil
சவூதி அரேபியாவில் ரூ.65,000 கோடியில் பிரம்மாண்டமாக 'ஆமை' வடிவிலான மிதக்கும் நகரம் உருவாக்கப்படவுள்ளது
Pangeos என்ற பெயரில் அனைவரையும் மிரம்மிக்க வைக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட மிதக்கும் நகரம் கட்டப்படவுள்ளது.
சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த Pangea கண்டத்தின் நினைவாக, இதற்கு Pangeos என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
18,000 அடி நீளமும், 2,000 அடி அகலமும் கொண்ட இந்த மிதக்கும் நகரில் பல்வேறு வசதிகள் செய்யப்படவுள்ளன.
மால்கள், பூங்கா, கிளஃப், 64 அடுக்குமாடி குடியிருப்புகள் என சகல வசதிகளுடன் இந்த மிதக்கும் நகரம் கட்டப்படவுள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த லாஸாரினி என்ற கட்டுமான நிறுவனம், உலகின் மிகப் பெரிய மிதக்கும் இந்த நகரை உருவாக்க உள்ளது.
இந்த பிரம்மாண்ட ஆமை வடிவிலான மிதக்கும் நகரை அடுத்த 8 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த மிதக்கும் கப்பலில் ஒரே நேரத்தில் 60,000 பேர் வரை பயணிக்க முடியும்.
கடலில் ஒரே இடத்தில் நிற்காமல், மிதக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட கப்பல் நகரம் வடிவமைக்கப் படவுள்ளது.
இந்த ராட்சத Pangeos ஆமை வடிவ மிதக்கும் கப்பல், உலகம் முழுவதும் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
இந்த பிரம்மாண்ட மிதக்கும் நகரம் பயன்பாட்டுக்கு வந்தால், உலகின் மிகப்பெரிய மிதக்கும் கட்டமைப்பாக இருக்கும்.