Tap to Read ➤

தீபாவளி வாழ்த்து அனுப்பி மோசடி செய்யும் கும்பல்

இணையதளம் மூலம் மோசடி செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
HTML Tamil
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து சொல்வது வழக்கம்.
இதேபோல், பிரபல நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துச் செய்தி அனுப்பும்.
தற்போது போலியான இணையதளங்கள் மூலம், தீபாவளி வாழ்த்து அனுப்பி, பணம் மோசடி செய்யும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
சிறப்பு பரிசுகள் கொடுப்பதாகவும், தீபாவளி வாழ்த்து கூறுவதாகவும் பலருக்கும் இதன்மூலம் மெசேஜ்கள் வருகின்றன.
இந்த மெசேஜில் உள்ள லிங்கை கிளிக் செய்தால், பண மோசடி செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலியாக உருவாக்கப்படும் இணையதளங்கள் மூலம், ஒருசிலரை குறிவைத்து தீபாவளி வாழ்த்து அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, பெண்களுக்கே இந்த இணையதளங்கள் மூலம் தீபாவளி மெசேஜ்கள் அதிகம் அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பை கிளிக் செய்தால், தீபாவளி பரிசுகள் பெறுவதற்காக, உங்களது வங்கி விவரங்கள் கேட்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி வாழ்த்துகள் அடங்கிய போலியான மெசேஜை கிளிக் செய்தால், வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிபோகும் ஆபத்து உள்ளது.
தீபவாளியை மகிழ்ச்சியாக கொண்டாட உள்ள நிலையில், இதுபோன்ற மோசடி கும்பலிடம் சிக்கிக்கொள்ளாமல் தற்காத்துக்கொள்வது நல்லது.