இந்த யூனிவர்சில் மிகவும் வேகமானது ஒளிதான். அந்த ஒளியானது தோராயமாக வினாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கிறது.
இந்த ஒளியின் வேகத்தில் பயணிப்பவர்கள் காலப் பயணம் செய்ய சாத்தியம் உண்டு.
அதாவது, ஒரு த்ரட் மில்-லில் நீங்கள் ஓடிக்கொண்டிருக்கு போது, கீழே 1,2,3 என நம்பர்கள் சென்றுக்கொண்டிருக்கும்.
எண் 10 வரும்போது திடீரென கைப்பிடியில் கையை ஊன்றி இரண்டு கால்களையும் மேலே உயர்த்தி சில நொடிகள் வைத்திருந்தால் கீழே உள்ள எண்கள் 11, 12 என கடந்து 20 வரை கூட சென்றிருக்கும். இதை தான் கால பயணம் என்கிறார்கள்.
நீங்கள் காலத்தின் வேகத்தை கடந்து செல்லும்போது பூமி இயல்பாக இருக்கும். அங்குள்ளவர்களுக்கு காலம் சரியாக சென்றுக்கொண்டிருக்கும். ஆனால் உங்களுக்கு காலம் மிக மெதுவாக சென்று கொண்டிருக்கும்.
இதற்காக 3 லட்சம் கி.மீ/வி வேகத்திற்கு பயணிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அதில் பாதி வேகத்தில் பயணித்தால் கூட கால பயணம் சாத்தியம் தான்.
ஆனால் நீங்கள் எவ்வளவு வேகமாக பயணிக்கிறீர்களோ, அவ்வளவு மெதுவாக வயது (காலம்) நகரும்.
சரி ஒரு கட்டத்தில் வினாடிக்கு 3 லட்சம் கிமீ வேகத்தில் சென்றால் என்ன நடக்கும் என்று யோசிக்கிறீர்களா?
அவ்வாறு ஒளியை விட அதிக வேகமாக பயணிக்கும்போது இறந்த காலத்திற்கு செல்வீர்கள். அதாவது உங்கள் குழந்தை பருவத்திற்கு செல்வீர்கள்.
ஆனால் அவ்வாறு இறந்த காலத்திற்கு சென்றால் நாம் அங்கேயே மாட்டிக்கொள்வோம். திரும்ப வரவே முடியாது என்று ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.
எனவே தான் காலப்பயணம் சினிமாக்களில் காட்டுவதை போல சிம்பிளானது கிடையாது. கொஞ்சம் சிக்கலானதுதான்.