Sidhanathan K       Nov 24, 2023

அதிர்ஷ்டம் தரும் செங்காலி மாலை.. எந்த ராசிக்காரர்கள் அணிந்தால் யோகம்..?

திரையுலக பிரபலங்கள் சிலர் கருங்காலி மாலை அணிந்ததில் இருந்தே, பலரும் அதை அணிய தொடங்கியுள்ளனர்.

தற்போது முருகனுக்கும், பைரவருக்கும் உகந்தது என கூறி செங்காலி மாலைகளை விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் செங்காலி மாலைக்கு என்ன சக்தி இருக்கிறது, எந்த ராசிக்காரர்கள் அதை அணியலாம் என்று பார்ப்போம்.

கருங்காலி மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம். இந்த மரத்துண்டுகளை கோவில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தை நிலை நிறுத்த பயன்படுத்துவார்கள்.

அது பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்ரகத்தின் அடியில் சில தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கும் அந்த சக்தியுடன் கலந்து நமக்கு அபரிதமான சக்தியை வழங்கும்.

கருங்காலி மரத்தின் வேர், பட்டை போன்றவை மருத்துவ குணம் கொண்டவை. கருங்காலி மரத்தின் பட்டையை அரைத்து சாப்பிட்டால் ரத்த சம்பந்தமான நோய்கள் விரைவில் குணமாகும் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

கருங்காலி வேர் நீர் ஆனது வயிற்றுவலி, சர்க்கரை நோய், சோர்வு போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்தாகும்.

செங்காலி மரமும் கருங்காலியின் பண்புகளை போன்றது. மேலும் அதற்கு தெய்வீக சக்தியும் உண்டு. தேக்கு மரத்தை விட வலிமையானது.

கருங்காலி கண் திருஷ்டியில் இருந்து காக்கும் என்றால், செங்காலியானது பிரபஞ்ச சக்தியிலிருந்து நமக்கு நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

செங்காலி மரத்தை வீட்டில் வளர்த்தால் கெட்ட சக்திகள் அண்டாது. செங்காலி மாலைகள் அணிபவர்களுக்கு தெய்வாம்சம் நிறைந்திருக்கும். கோவில் கட்டுமானப்பணிக்கு செங்காலி மரத்தை பயன்படுத்துவார்கள்.

செங்காலியை பயன்படுத்தினால் முகம் பொலிவடையும். அந்த காலத்தில் அரசர்கள் செங்காலி மாலைகள் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதிலுள்ள மின்காந்த ஆற்றல் மந்திரத்தை உறிஞ்சிவிடும்.

கார்களில் செங்காலி மாலைகளை வைத்திருப்பது விபத்துகளில் இருந்து பாதுகாப்பு தருவதோடு, வேலை கிடைக்காதவர்களுக்கும், சுப காரிய தடை உள்ளவர்களுக்கும் செங்காலி மாலை நல்ல பலனை தருகிறது.

மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்கள், கிருத்திகை, விசாகம், திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செங்காலி மாலை, வளையல், பிரேஸ்லெட் அணியலாம்.

அசைவ உணவுகளை உண்ணும்போது செங்காலி மாலையை கழற்றிவிட்டு பின்னர் அணியலாம். மேலும், செங்காலி பிரேஸ்லெட்டாக, ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணியலாம்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories