இறால் உணவுகள் சுவையிலும், சத்திலும் சிறந்தவை. மிக எளிமையான முறையில் இயற்கையான சுவையுடன் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான உணவாகும்
வெறும் 10 நிமிடங்களில் முருங்கை இலை மணம் வீசும் இறாலை எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்
தேவையான பொருட்கள்: இறால் - 1/2 கிலோ, மிளகாய் தூள் -2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி, முருங்கை இலை - 1 கை பிடியளவு, எண்ணெய் தாளிக்க தேவையான அளவு, உப்பு தேவையான அளவு
முதலில் இறால்களை சூடுநீரில் போட்டு, மேல்தோலை உரித்து உள்ளிருக்கும் சதைப்பகுதியை எடுத்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
சுத்தம் செய்த இறால்களை பாத்திரத்தில் போட்டு மிளகாய் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து மிதமான தேதியில் வேகவிடவும்
பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் முருங்கை இலை சேர்த்து தாளிக்கவும். அதில் வேகவைத்த இறால்களை சேர்த்து, 10 நிமிடம் மிதமான தீயில் நன்றாக கிளறி வதக்கவும், பின்பு அடுப்பை அணைத்து விடவும்
சூடான சிங்கி இறால் தயார், இதை சாதம் அல்லது ரசம் சாதத்துடன் பரிமாறலாம்