Sidhanathan K       Sep 02, 2024

தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..!!

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன.

நீரில் எலுமிச்சை சாறை பிழிந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

ஆனால், எலுமிச்சையை அதிகமாக எடுத்துக்கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துமாம். அந்தவகையில், தினமும் எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பார்ப்போம்.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அப்படி இருக்கையில், வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வது உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தி செயலிழக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே, எலுமிச்சை சாறு அதிகமாக எடுத்துக்கொண்டால் அசிடிட்டி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

அதேபோல இந்த சிட்ரிக் அமிலம் ஒரு கரைப்பானாக செயல்படுவதால், எலுமிச்சை சாறை பற்களின் மேல் படாமல் குடிப்பது நல்லது.

மேலும், சிட்ரிக் அமிலம் நமது வாயில் உள்ள மென்மையான திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, வாய்ப்புண் மற்றும் கொப்புளங்களை உண்டாக்கும்.