Sidhanathan K       Apr 27, 2025

மருத்துவ குணம் நிறைந்த நிலாவாரை பொடியின் பக்க விளைவுகள்..!!

நாம் வசிக்கும் இடங்களில் சில மூலிகைகள் வளர்ந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி நமக்குத் தெரியாது. அத்தகைய ஒரு மூலிகைதான் இந்த நிலாவாரை.

நிலாவாரையின் இலைகள் கசப்பாக இருந்தாலும் அதன் மருத்துவ பயன்கள் எண்ணற்றவை. அதனால்தான் இந்த மூலிகை அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

எந்த மூலிகையாக இருந்தாலும், நன்மைகளைப் போலவே தீமைகளும் உள்ளன. அந்த வகையில், இன்றைய பதிவில் நிலாவாரை பொடியின் தீமைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

நிலாவாரை மூலிகை பொட்டாசியம் அளவைக் குறைக்கும். இவ்வாறு குறைந்த பொட்டாசியம் அளவுகள் டிகோக்சின் பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

இந்த மூலிகைப் பொடி வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று அசௌகரியம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

வேறு ஏதேனும் பிரச்சனைக்கு மருந்து அல்லது மாத்திரைகளை நீங்கள் எடுத்துக்கொண்டிருந்தால் இந்த மூலிகையை அதனுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளக்கூடாது.

இரைப்பை குடல் பிரச்சனைகள், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம் அல்லது மூல நோய் உள்ளவர்கள் நிலாவாரையை எடுத்துக்கொள்ளக்கூடாது.

கர்ப்பிணி பெண்களுக்கு இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த நிலாவாரை மூலிகையை எடுத்து கொள்ள வேண்டாம்.

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூலிகையை மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் இந்த மூலிகையை எடுத்துக்கொள்ள நினைத்தால், மருத்துவரை அணுகாமல் அதை எடுத்துக்கொள்ளாதீர்கள்.