Sidhanathan K       Aug 28, 2024

வயாகரா மாத்திரை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!!

விறைப்புக் குறைபாடு ஆண்களின் சுயமதிப்பை பாதிப்பதோடு, அவர்களது உறவுகளையும் பாதிக்கிறது.

அந்தவகையில், ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மையை தற்காலிகமாக குணப்படுத்த வயாகரா பயன்படுத்தப்படுகிறது.

உளவியல் சிகிச்சைகள், மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்றவை பாலியல் செயலிழப்பை ஏற்படுத்தலாம்.

வயாகரா பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஆய்வின் படி, வயாகரா அல்லது பிற விறைப்புத்தன்மை குறைபாடு மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவது கடுமையான கண் பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்குமாம்.

தலைசுற்றல், தலைவலி, குறைந்த இரத்த அழுத்தம், கண்கள் முன்னால் ஒளி தோன்றுதல் போன்ற பிற பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும்.