Sidhanathan K       Jan 25, 2024

பெண் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்வதற்கான அறிகுறிகள்..!!

Pregnancy Test Kit சோதனையில் இரண்டு கோடுகள் தோன்றினால், அந்த பெண் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இது தவிர கர்ப்பத்தை உறுதிப்படுத்த சில அறிகுறிகள் உள்ளன.

ஒரு சில பெண்கள் வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளை விரைவாகவே உணர்வார்கள்.

கர்ப்ப காலத்தில் முக்கியமானது ஒரு பெண்ணிற்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். கவலை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு உற்சாகமாகவும், பரவசமாகவும் காணப்படுவார்கள்.

கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் அதிகரிப்பு காரணமாக வீக்கம் உண்டாகலாம்.

கர்ப்ப காலத்தில் வாசனை உணர்திறன் அதிகரிக்கிறது. அதாவது, மெல்லிய நறுமணம் கூட அதிகமாக உணரப்படுகிறது.

கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களின் அறிகுறியாக, சில பெண்களுக்கு கருப்பை பிடிப்பு உண்டாகிறது. இது சில நேரங்களில் மாதவிடாய் பிடிப்பு ஏற்படுவதை போல உணரலாம்.

மார்பகங்களில் வலி, கனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுதல்.

ஹார்மோன்கள் இடைவெளி இல்லாமல் வேலை செய்வதால் எப்பொழுதும் உடல் சோர்வாக இருப்பதை போன்ற உணர்வு.

பொதுவாக தாமதமான மாதவிடாய் கர்ப்பத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. இருப்பினும் மருத்துவரை அணுகி உறுதி செய்வது நல்லது.

காலையில் எழுந்ததும், மாதவிடாயின் போது ஏற்படுவது போல் வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படும். கருப்பை விரிவடைவதால் இந்த வயிற்று வலி ஏற்படுகிறது.

எவ்வளவு சாப்பிட்டாலும் பசி உணர்வு ஏற்படும். வயிறு மந்தமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும்.

சாப்பிடும் உணவு விரைவாக ஜீரணம் ஆகாது. மலசிக்கல் ஏற்படும் வாய்ப்புண்டு.

வழக்கத்துக்கு மாறாக உடல் சூடாக இருப்பதை போன்று உணர்வார்கள். உணவு சமைக்கும் வாசனையை விரும்பமாட்டார்கள்.

கர்ப்ப காலத்தில் உடல் வெளிப்படுத்தும் கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக சிறுநீர்ப்பை அதிகமாக வேலை செய்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

இந்த நேரத்தில் திரவ உட்கொள்ளுதலை குறைக்கக் கூடாது. மேலும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை என்பதால் இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories