Tap to Read ➤

உடலின் ரத்த சுத்திகரிப்புக்கான எளிய வீட்டு வைத்தியம்!!

ரத்தம் சுத்திகரிப்புக்கு உதவும் சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.
HTML Tamil
உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறு உள்ளிட்டவை, ரத்தம் சுத்தமின்மையின் சில அறிகுறிகளாகும்.
நமது உடலின் அனைத்து சரியான செயல்பாட்டையும் உறுதிப்படுத்துவதற்கு, ரத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலின் செயல்பாட்டிற்கு அடிப்படை சக்தியான ரத்தத்தை தூய்மையாகவும், நச்சுத்தன்மை இல்லாமலும் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
அடிக்கடி இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
ரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
ரத்த சுத்திகரித்து உடல் வலுப்பெற, ஏழைகளின் ஆப்பிள் என்ற கூறப்படும் தக்காளியை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.
ரத்தத்தை சுத்திகரிக்க கேரட்டை, பச்சையாகவோ, ஜூஸ் வடிவிலோ எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி உணவிலும் கேரட்டை சேர்த்து கொள்ளலாம்.
பச்சை காய்கறிகளில்  உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள், சிகப்பு ரத்த அணுக்களுக்கு தீங்கு இழைக்கும் கூறுகளை அழிக்க உதவுகின்றன.
வைட்டமின்கள் ஈ மற்றுசியும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகமுள்ள பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடம்பில் புதிய ரத்தம் சுரக்கும்.
ரத்தம் விருத்தி ஆக, நாவல் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், வெட்டை சூடு தீர்ந்து ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை, துவரம் பருப்புடன் சமைத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியாகும்.