வண்டு, பூச்சி கடிக்கு, வெள்ளைப்பூண்டை அரைத்து கட்ட விஷம் முறியும்
பூரான் கடி விஷம் முறிய, தும்பை இலைச்சாறு பூசலாம், அல்லது குப்பை மேனி, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து பற்று போட குணமாகும்
கம்பளி பூச்சி கடிக்கு, வெற்றிலையை வைத்து அழுத்தி தேய்க்க, விஷம் இறங்கும்
எலிகடி விஷம் முறிய, விளாமரத்தின் பூக்களை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால், விஷம் முறிந்துவிடும்
தேனி கொட்டினால், சுண்ணாம்பு, புளி இரண்டையும் பிசைந்து, தேனி கொட்டிய இடத்தில் அழுத்தி ஓட்ட வைத்து விட்டால் கடுப்பு நின்று விடும்
எந்த விஷக்கடியானாலும், வெங்காயத்தை நறுக்கி தேய்க்க வலி மற்றும் வீக்கம் குறையும்