Tap to Read ➤

கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தைப் போக்க சில எளிய வழிமுறைகள்!!

கருவளையம் நீங்க சில எளிய குறிப்புகள்..!!
Sidhanathan K
முதலில் கண்களை சுத்தமான நீரில் கழுவி, பின் சுத்தமான காட்டனை எடுத்து பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைக்க கண்கள் குளிர்ச்சி அடைந்து கருவளையம் நாளடைவில் மறையும்.
பாதாமை சிறிதளவு பாலுடன் கலந்து, பேஸ்டாக அரைத்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மறைந்துவிடும்.
1 ஸ்பூன் மஞ்சள் தூளில் 2 ஸ்பூன் அளவு தேன் கலந்து நன்றாக குழைத்து கருவளையம் இருக்கும் இடத்தில் பேக் போல் போட்டுக்கொள்ளலாம்.
ஒரு ஸ்பூன் தக்காளி சாறுடன் ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சில வாரங்களில் கருவளையம் மறைந்துவிடும்.
சுத்தமான தேங்காய் எண்ணெயை காட்டனில் தொட்டு கண்களுக்கு அடியில் மசாஜ் செய்தால் நாளடைவில் கருவளையங்கள் மறைந்துவிடும்.
பாலுடன் சிறிது குங்குமப்பூவை சேர்த்து அதில் காட்டனை நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களை கழுவினால் கருவளையம் நீங்கும்.
குளிர்ந்த பாலில் காட்டனை நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் மறையும்.
ஆலிவ் ஆயில் கொண்டு கண்களில் மசாஜ் செய்தால் கண்கள் களைப்பு நீங்கி கருவளையம் மறையும்.
வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்திருந்தால் கண்களின் சோர்வு நீங்குவதுடன் கருவளையங்களும் மறையும்.
வெள்ளரிக்காயை பேஸ்ட் போல அரைத்து கண்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் கருவளையம் மறையும்.
வெள்ளரி விதைப் பொடியை தயிருடன் கலந்து பேஸ்ட் செய்து தடவி வந்தால் ஒரே மாதத்தில் கருவளையம் மறைந்துவிடும்.