Tap to Read ➤

எளிய தமிழ் பின்ன இலக்கங்களும் அவற்றின் மதிப்பும்..!!

தமிழில் கணிதச் சொற்கள்!
Sidhanathan K
பின்ன இலக்கம் என்பது ஒரு முழு எண்ணின் பாகங்களாக உள்ள எண்களுக்கு வழங்கும் பெயராகும்.
1 (ஒன்று) - ஒன்று
3/4 (4 ல் மூன்று பங்கு) - முக்கால்
1/2 (2 ல் ஒரு பங்கு) - அரை
1/4 (4 ல் ஒரு பங்கு) - கால்
1/5 (5 ல் ஒரு பங்கு) - நாலுமா
3/16 (16 ல் மூன்று பங்கு) - மூன்று வீசம்
3/20 (20 ல் மூன்று பங்கு) - மூன்றுமா
1/8 (8 ல் ஒரு பங்கு) - அரைக்கால்
1/10 (10 ல் ஒரு பங்கு) - இருமா
1/16 (16 ல் ஒரு பங்கு) - மாகாணி (வீசம்)
1/20 (20 ல் ஒரு பங்கு) - ஒருமா
3/64 (64 ல் மூன்று பங்கு) - முக்கால்வீசம்
3/80 (80 ல் மூன்று பங்கு) - முக்காணி
1/32 (32 ல் ஒரு பங்கு) - அரைவீசம்
1/40 (40 ல் ஒரு பங்கு) - அரைமா
1/64 (64 ல் ஒரு பங்கு) - கால் வீசம்
1/80 (80 ல் ஒரு பங்கு) - காணி1/80 (80 ல் ஒரு பங்கு) - காணி
3/320 (320 ல் மூன்று பங்கு) - அரைக்காணி முந்திரி
1/160 (160 ல் ஒரு பங்கு) - அரைக்காணி
1/320 (320 ல் ஒரு பங்கு) - முந்திரி