Tap to Read ➤

நுரையீரலை சுத்திகரிக்க எளிய டிப்ஸ்

நுரையீரலில் படியும் நச்சுக்களை இயற்கையான முறையில் அகற்றலாம்.
HTML Tamil
நுரையீரலில் அதிகப்படியான நச்சுக்கள் தேங்கியிருந்தால், நுரையீரல் பிரச்சனை வருவாற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.
மாசு நிறைந்த காற்றும், வாகனப் புகை, புகைப்பிடித்தல் போன்ற காரணங்களால் புகையும், காற்றும் நுரையீரலில் அழுக்காகப் படிகிறது.
நுரையீரலை சுத்திகரிக்க பூச்சிகொல்லி தெளிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது நல்லது.
சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
நுரையீரலை சுத்திகரிக்க, பால் பொருட்களை முழுமையாக தவிர்ப்பது மிகவும் நல்லது.
புதினா இலைகளை நாள்தோறும் மென்று சாப்பிடவேண்டும். நுரையீரலில் உள்ள தீய பாக்டீரியாக்களை புதினா வெளியேற்றிவிடும்.
நுரையீரலை சுத்திகரிக்க, காலை மற்றும் மதிய உணவுகளுக்கு இடையே கேரட் ஜூஸ் குடிக்கலாம்.
உணவில் சிறிதளவு பூண்டை சேர்த்து வந்தால், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரல் பாதுகாக்கப்படும்.
இஞ்சியை உணவில் சிறிதளவு சேர்த்து வரவேண்டும். நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகளை அகற்ற இஞ்சி பெரிதும் பயன்படுகிறது.
நுரையீரலில் தொற்றுக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட, இரவு தூங்கும் முன் கிரான்பெர்ரி ஜூஸ் குடிக்க வேண்டும்.
தினமும் அரைமணி நேரம் யோகா பயிற்சி செய்வதன் மூலமாக நுரையீரலில் படிந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றலாம்.