Tap to Read ➤

அஜீரண கோளாறை குணமாக்க எளிய டிப்ஸ்!

வீட்டு வைத்தியம் மூலம் அஜீரண கோளாறை எளிதில் குணமாக்கலாம்.
HTML Tamil
தவறான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம், மது அருந்துதல், புகைப் பிடித்தல் போன்ற காரணங்களால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது.
குமட்டுதல், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், வாய் புளித்தல், வாய் நாற்றம், வயிற்றுப்போக்கு, பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவை அஜீரணத்திற்கான அறிகுறிகளாகும்.
அஜீரண பிரச்சனைகளை, எளிய வீட்டு வைத்தியம் மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
இஞ்சி

இஞ்சியிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட் அஜீரணத்தை குணப்படுத்த உதகிறது. உணவில் இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சி தேநீர் குடிக்கலாம்.
வாழைப்பழம்

 அதிகளவு பொட்டாசியம் மற்றும் நார்சத்து அதிகமுள்ள வாழைப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், அஜீரண கோளாறு குணமாகும்.
வெற்றிலை

உணவு சாப்பிட்ட பின்னர் வெற்றிலை சாறு 2 ஸ்பூன் குடித்தால் அஜீரணம் நீங்கும். இதற்காகத்தான், நம் முன்னோர்கள், உணவுக்குப் பின்னர் வெற்றிலை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
சோம்பு

பெருஞ்சீரகம் என அழைக்கப்படும் சோம்பு மலச்சிக்கலை நீக்க உதவுகிறது. உணவு செரிமானத்திற்கும் சோம்பு பயன்படுகிறது.
ஏலக்காய்

 ஏலக்காயை பொடியாக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் குடித்தால், அஜீரணப் பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கிராம்பு

கசப்புக் கலந்த காரமான சுவை கொண்ட கிராம்பை வாயில் போட்டு மெல்லலாம். கிராம்பு உமிழ்நீர் சுரப்பதை தூண்டி, செரிமானத்திற்கும் உதவுகிறது.
துளசி

உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை சாப்பிட்டால், அஜீரண கோளாறுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
புதினா

புதின இலைகளை நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் பருகினால் அஜீரண கோளாறுக்கு நிவாரணம் கிடைக்கும்.
நெல்லிக்காய்

 நெல்லிக்காய் சாற்றில் மூன்றில் ஒரு பங்கு தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அஜீரண கோளாறு சரியாகும்.
சுக்கு, மிளகு, திப்பிலி

சுக்கு, மிளகு, திப்பிலி, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொரித்து பொடி செய்து தினமும் சாப்பிட்டால் அஜீரண கோளாறு நீங்கும்.